சீரற்ற காலநிலையால் 65,580 குடும்பங்கள் பாதிப்பு – 1,390 வீடுகளுக்கு சேதம்!




நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.


ஆயிரத்து 390 வீடுகள் பகுதியளவும், 39 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

 

இடம்பெயர்ந்தவர்களில் 50 ஆயிரத்து 602 பேர் உறவினர்களின் வீடுகளிலும், 12 ஆயிரத்து 349 பேர் பாதுகாப்பான

இடங்களிலும் தங்கியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்