நாட்டில் நேற்று 723 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்



நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 723 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந் தவர்களின் மொத்த எண் ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 122 ஆக உயர்வடைந் துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்