அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களின் நிர்ணய விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த சில பிரதேசங்களில் அரிசி மற்றும் சீனி விலை மேலும் அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.
இந்த நிலைமை காரணமாக தற்போது குறித்த பிரதேசங்களில் சந்தைகளில் ஒரு கிலோ நாட்டரசி 140 – 150 ரூபாவுக்கும், வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோவின் விலை 120 – 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 160 – 170 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 155 – 160 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
அரிசி, சீனி தவிர்ந்த உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, டின் மீன் ஆகிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்த பிரதேச மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனா்.
இவ்வாறு, அரிசி , சீனி உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் உருவாகியுள்ள நிலைமையினால் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த நுகர்வோா் வெளியிட்டுள்ளனா்.
பொருட்களின் விலை இவ்வாறு அதிகரித்தாலும் தமக்கான வருமானம் இதுவரையில் அதிகரிக்கப்படவில்லை என்றும் இதனால் வாழ்வாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனா்.
0 கருத்துகள்