சமூக வலைத்தளங்களில் பரவும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வீதி போக்குவரத்து சட்டம் தொடர்பில் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, போக்குவரத்து விதிமீறல்களும் அபராதங்களும் இதுவரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் அபராதங்களிலிருந்து சட்டரீதியாக வேறுபட்டவை.
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி எனவும், இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 கருத்துகள்