கோழித் தீனின் விலை அதிகரிப்பால் கோழியின் விலைக்கட்டுப்பாடு நீக்கம்

 



கோழித் தீனின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் கோழியின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இலங்கை அரசு நீக்கியுள்ளது.


டின் மீன், பருப்பு, சீனி, பால், சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நவம்பர் 03 முதல் கோழி இறைச்சி மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.


மார்ச் 2020 இல் CAA ஆனது தோலுடன் கூடிய பிராய்லர் கோழிக்கு கிலோவிற்கு 430 ரூபாயும், தோல் இல்லாத பிராய்லர் கோழிக்கு 500 ரூபாயும் விலைக் கட்டுப்பாடுகளை விதித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்