அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்,
புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்ரவை இணைப்பேச்சாளர் ரொமேஷ் பத்திரண , “நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
“வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக, சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்