யுகதனவி வழக்கு : ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்


யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட பல பிரிவினர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்