அலி சப்ரி பதவி விலகக் கூடாது என்ற, நிலைப்பாட்டில் ஜம்இய்யத்துல் உலமா..?


நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது அமைச்சு பதவியில் இருந்து விலகக் கூடாது என்ற, நிலைப்பட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளதாக அறிய வருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின், முக்கிய பதவிகளில் உள்ள சிலரின் விருப்பம் இதுவெனவும், இக்கட்டான தற்போதைய நிலையில், அலி சப்ரி நீதி அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது, அவசியமற்றது எனவும், அலி சப்ரியும் விலகினால், அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு முஸ்லிமும் இல்லாமல் போகும் நிலை உருவாகும் என அந்த உலமாக்களின் வாதமாகும்.

இதுபற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின், முக்கிய பதவிகளில் உள்ள உலமாக்கள் சிலர், (செயற்குழு உறுப்பினர்கள்) Srilanka Muslims இணையத்துடன் தொடர்பு கொண்டு, நீதி அமைச்சுப் பதவியிலிருந்து அலி சப்ரி, பதவி விலகக்கூடாது என்பது எமது அபிப்பிராயம் ஆகும். முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருதொகையினரும் அலி சப்ரி விலகக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

எனவே அமைச்சு பதவியிலிருந்து விலகும் முடிவை அலி சப்ரி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்