அரசாங்கத்துடன் முடியாது… வேறு வழியில் பயணிக்கவுள்ள பங்காளிக்கட்சிகள்?


அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளின் யோசனைகளை அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதானகே தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் 11 தலைவர்களும் இரு வாரங்களுக்கு ஒருமுறை கூடி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தங்களது யோசனைகளை அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருமானால், தாங்கள் அரசிலிருந்து வெளியேறி வேறு வழியில் பயணத்தை மேற்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


பண்டாரவளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


நன்றி thamilan

கருத்துரையிடுக

0 கருத்துகள்