இருவேறு பகுதிகளில் பாரிய மண்சரிவு – இருவர் பலி – இருவர் மாயம்

 




கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர்.


கேகாலை அத்னாதொட பகுதியில் நேற்றிரவு வீடொன்றின்மீது பாரிய மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.

 

ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் காணாமல்போயுள்ளனர். மீட்பு பணி தொடர்கின்றது.


குருணாகல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 65 மற்றும் 70 வயதுகளுடைய இருவர் பலியாகியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்