வெல்லவாய விபத்தில் இளைஞன் பலி

 



வெல்லவாய தனமல்வில பிரதான வீதியில் குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பிரதேசத்தில் இன்று (02) காலை கொள்கலன் பாரவூர்தி ஒன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.


தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த வேன் மற்றும் வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கி சீனி ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி என்பன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


வேனில் பயணித்த 27 வயதுடைய சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வேன் சாரதியின் கவனக்குறைவாகவே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்