BREAKING NEWS ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி மூவர் பலி!


கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


மண்மேடொன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த தாயும், 8 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும்  உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த சிறுமிகளின் தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்