நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு




நாடளாவிய ரீதியில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைத்தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நான்கு நாட்களாக லிட்ரோ நிறுவனம் எந்தவொரு எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லை. இதனால் பண்டிகைக்காலங்களில் உணவகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை கொழும்பை அண்மித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட 3200 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிராகரித்தது.

இந்தநிலையில், மாலைத்தீவிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த மற்றுமொரு கப்பலிலுள்ள 2000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவும் பரிசோதிக்கப்படுகின்றது.

கப்பலிலுள்ள சமையல் எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.​

கருத்துரையிடுக

0 கருத்துகள்