கூட்டு ஆவணத்துக்கு பூர்வாங்க இணக்கம்!




தமிழ் பேசும் தரப்புகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் கடிதம் ஒன்றை – ஆவணத்தை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில், தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆவண வடிவம் தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் இன்று நடைபெற்ற தமிழ்ப் பேசும் தரப்புகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டது.


ஏற்கனவே இக்கூட்டத்தில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் 2 பக்க நகல் ஆவணமொன்றை இன்றைய கூட்டத்தில் ரெலோ கையளித்திருந்த நிலையில், அந்த நகல் ஆவணத்தை ஏற்பதற்கு தமிழரசுத் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழரசு தரப்பினால் 8 பக்க நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் இணைத்துக்கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

வயதில் மூத்த தலைவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து புதிய நகல் வடிவத்தை தயாரிப்பதில் இன்று மாலை முழுவதும் ஈடுபட்டிருந்தனர்.


சுமந்திரன், மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம், ஶ்ரீகாந்தா, மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாலை 6 மணியளவில் நகல் வடிவத்துக்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது.

தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 8 விடங்களையும் இணைப்பாக சேர்ப்பதற்கும் – அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து புதிய வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பு சுமந்திரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்