ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கான கட்டணத்தை டொலரில் செலுத்துவதற்கு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
பெற்றோலிய இறக்குமதிக்கு தேவையான கடன் கடிதங்களை டொலர்களில் செலுத்துமாறு சேவை வழங்குநர்களிடம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்மைய கட்டணத்தை டொலரில் செலுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 330 மில்லியன் டொலரை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாக அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்