எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு மத்திய வங்கி நிதி அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் லீட்டரை - 35 ரூபாவாலும் டீசல் லீட்டரை - 24 ரூபாவாலும் மண்ணெண்ணை லீட்டரை - 11 ரூபாவாலும் அதிகரிக்கை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி நிதி அமைச்சருக்கு கடந்த 10 திகதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்க எரிபொருள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்