நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் இன்று மாலையுடன் நிறைவடையும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்காரணமாக, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதன் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு தொடருமாயின் இன்றைய தினம் அது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்