Top News

மகிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை, அரசியலிலிருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள்



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.



மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ள தாக நாட்டில் தகவல் ஒன்று பரவி வருவது குறித்து செய்தியாளர் ஒருவர், திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இவ்வாறு பதில் வழங்கி யுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஒரு முறை அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தார். நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. மீண்டும் அவர் ஓய்வு பெற முயற்சித் தாலும் அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள்.

இதுதான் உண்மையான கதை. அவர் விரும்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்காது. மகிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை அரசியலிலிருந்து ஓய்வு பெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post