பால்மா விலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்


சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்ற பின்னணியில், பால்மாவில் விலைகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் களஞ்சியசாலை கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் பால் மா இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்