வைத்தியர் ஷாபிக்கு சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற வேண்டும்... இதனால் நாட்டில் இனவாத முரண்பாடுகள் ஏற்படலாம்.





(ஆர்.யசி)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபிவிடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தை மீளப்பெற்று உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.


அத்துடன் ஷாபி விடயத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.




குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபியை மீண்டும் பணிக்கு அழைப்பதும் அவருக்கான கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கான முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மூலமாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்

ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்