Top News

மழை இல்லை… எரிபொருள் இல்லை… நாடு முழுவதும் மின்வெட்டு






ஜனவரி மாதம் 3ஆவது வாரமளவில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




நாட்டின் அன்றாட மின்சாரத் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, நெரிசல் நேரங்களில் மின்சாரத்தின் தேவை அதிகரித்தால், எதிர்காலத்தில் இந்த மின்துண்டிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.




எவ்வாறாயினும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் இந்த நிலைமையை தடுக்க முடியும் எனவும், இல்லையெனில் வறட்சியான காலநிலை நீடிக்கும் போது நாடு முழுவதும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post