Headlines
Loading...
   இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!




இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கல், தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் கலைஞர்களுக்கான தரவுத்தளம் வெளியீட்டு விழா நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.


இதன்போது பிரதமரின் தலைமையில் கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கப்பட்டது.


பிரதமர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜயசிங்க ஆகியோரும் காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


சொஃப்ட்லொஜிக் காப்புறுதி நிறுவனத்தினால் வழங்கப்படும் 50 காப்புறுதி பத்திரங்கள் கலைஞர்களுக்கு குறியீட்டு ரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.


தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இதன்போது பிரதமரின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.


கலைஞர்களுக்கான தரவுத்தளம் வெளியிட்டு வைக்கப்பட்டு நடிகர் ரவீந்திர ரன்தெனிய மற்றும் நடனக் கலைஞர் கொடஹேவகே இராஜாங்க அமைச்சர் கொடஹேவகே கிரென்டின் சில்வா ஆகியோரின் தரவுகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களினால் அங்கீகரிக்கப்பட்டு தரவுத்தளத்தில் உள்ளடக்கப்பட்டது.


கலைஞர்களுக்கான இலவச காப்புறுதி வழங்கல் மற்றும் அனைத்து கலைஞர்களுக்குமான தரவுத்தளத்தை ஆரம்பித்தல் ஆகியன தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு பல கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,


கலாசார பாரம்பரியம் நிறைந்த பெருமைமிக்க வரலாற்றை நமது நாடு கொண்டுள்ளது. உங்களைப் போன்ற கலைஞர்களின் படைப்புகளால் இந்த வரலாறு வண்ணமயமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு தேசமாக நாம் இன்னும் உலகின் முன் ஒரு சிறந்த கலாசாரத்திற்கு உரிமை கோரும் ஒரு தேசமாகும்.


இலக்கியம், நடனம், நாடகம், கலை, பொம்மலாட்டம், சிற்பம்,இசை மற்றும் சினிமா ஆகியவற்றின் மூலம் சமூக யதார்த்தத்தை ஆக்கப்பூர்வமாக மக்களிடம் கொண்டு செல்ல கலைஞர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியை மக்கள் இன்னும் இரசிக்கிறார்கள்.


கடந்த காலங்களில் இந்த மக்கள் கொவிட் தொற்றுநோயால் பல சிரமங்களை எதிர்கொண்டதை நாம் அறிவோம். நாம் அது குறித்து கவனம் செலுத்தினோம். எமது இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்கள் கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வந்தார்.


எத்தனை சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த கலைஞர்கள் கடந்த காலங்களில் வீடுகளில் முடங்கிக்கிடந்த மக்களின் மனதைக் குணப்படுத்த பல்வேறு கலை படைப்புகளை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தனர்.


அதுமாத்திரமன்றி மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் உள்ள கொவிட் நோயாளிகளின் மனதைக் குணப்படுத்த சுகாதாரத் துறையுடன் இணைந்து செய்த தியாகங்களை நாம் மறக்க முடியாது. குறிப்பாக அத்தகைய கலைஞர்களை நினைத்து பெருமை கொள்கிறோம்.

அதனாலேயே அரசாங்கத்தினால் காப்புறுதி கட்டணங்கள் செலுத்தப்படும் பிரேக்ஷா காப்புறுதி திட்டத்தை வரலாற்றில் முதல் முறையாக எம்மால் அறிமுகப்படுத்த முடிந்தது.

அன்று நாடகத் துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மருத்துவ உதவி விபத்து காப்புறுதி, இன்று அனைத்துக் கலைஞர்களுக்குமான ஒரு மாபெரும் படியாக மாறியுள்ளது.


எங்கள் அன்பிற்குரிய கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த காப்புறுதியானது, கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசு என்று நாங்கள் நம்புகிறோம்.


அது மாத்திரமன்றி, இந்தக் காப்புறுதியை வழங்கும்போது நாம் ஒரு கலைத் துறைக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. கிராமிய கலைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தினோம். அதுவே இந்தத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனை என்று நான் நம்புகிறேன்.


அதுமட்டுமின்றி, நிரந்தர வருமானம் இல்லாத குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கும், கொவிட் தொற்றுநோயால் தொழில் மற்றும் வேலை பாதுகாப்பை இழந்தவர்களுக்கும் இந்த காப்புறுதி திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

0 Comments: