வறட்சியான காலநிலை ஏற்பட்டால் மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை – சமல் ராஜபக்ஷ!

ADMIN
0 minute read
0



வறட்சியான காலநிலை ஏற்பட்டால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மேலும் – நீர் முகாமைத்துவத்தை நாங்கள் செய்கின்றோம். அனைத்தையும் அவதானித்தே, விவசாயம் மற்றும் மின்சாரம் என்பனவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. எனினும், விவசாயத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த நிலையில், வறட்சியான காலநிலையுடன் நீர்மட்டம் குறைவடைந்தால், மின்னுற்பத்திற்கு நீரை வழங்க முடியாது எனத் தாம் அறியப்படுத்தியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளர்

பயிரிடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

To Top