Headlines
Loading...
   மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி



மத்திய நெடுஞ்சாலையில், மீரிகம- குருநாகல் வரையிலான பகுதியில், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு-குருநாகல் மற்றும் கொழும்பு- கண்டி வாகனங்கள் பயணிப்பதற்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவத்துள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், குருநாகல் முதல் மீரிகம வரையான பகுதிக்குள், இன்று (16) மதியம் 12:00 மணி வரை இலவசமாக பயணிக்க சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் தொடர்பான தகவல்களையும் நெடுஞ்சாலை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இலகு ரக வாகனங்களுக்கு : ரூபாய் 250.00
கனரக வாகனங்களுக்கு :− ரூபாய். 350.00 − 550.00

0 Comments: