நாட்டில் தற்போது கொரோனா சுனாமி அலையொன்று உருவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அனைவரும் கொரோனா தொற்றினால் மாத்திரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை எனவும், கொரோனா தொற்றுடன் மேலும் பல நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளவர்களே இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த தொற்றாளர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் புதிய சாதாரண நிலைமையின் கீழேயே பொதுமக்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment