Headlines
Loading...
காத்தான்குடி நகர சபை அமர்வில் ஹிஸ்புள்ளாஹ்வின் சேவைகளுக்கு பாராட்டுக்கள்

காத்தான்குடி நகர சபை அமர்வில் ஹிஸ்புள்ளாஹ்வின் சேவைகளுக்கு பாராட்டுக்கள்



நூருல் ஹுதா உமர்


காத்தான்குடி நகர சபையின் 46 வது சபை அமர்வு வியாழக்கிழமை காத்தான்குடி நகரமுதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் காத்தான்குடி நகருக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும், அவர்களுக்கான சில அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.


குறிப்பாக 'காத்தான்குடி' என்ற அழகிய நகரை பார்ப்பதற்காகவே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவதும் அப்பயணிகளை கவரும் வகையில் இந்த மண்ணில் ஒரு அழகிய புராதன நூதனசாலை, பலஸ்தீன அல்-அக்ஸா வடிவைப்போன்ற பள்ளிவாயல், அறபு தேசம் போல் பிரதான வீதியில் நடப்பட்டுள்ள ஈச்ச மரங்கள் மற்றும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள வீதி வளைவுகள் என காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள சகல இடங்களையும் (Landmarks) கலை நயத்துடனும் அழகிய முறையிலும் இந்த மண்ணை நோக்கி அதிகளவான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தர வேண்டும் அதனூடாக இந்த மண்ணில் உள்ள வியாபார சமூகம் வளர்ச்சி கண்டு முன்னேற வேண்டும் என்ற தூர நோக்கோடு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புள்ளாஹ் அவர்களையும் அவர்களது தூர நோக்கான பணிகளையும் சபை அமர்வில் அனைவரும் பாராட்டியதோடு அது தொடர்பாக சிலாகித்தும் பேசிக் கொண்டனர்.


மேலும் கருத்துத் தெரிவித்த நகர முதல்வர் இன்று அவரது பணிகளின் பலனை இந்த மண்ணும் மக்களும் அனுபவிப்பதாகவும் அதனை மேலும் சிறப்புற மேம்படுத்தி விரைவில் காத்தான்குடி நகர் தொடர்பான முழுமையான தகவல் அடங்கிய ஒரு சுற்றுலா வழிகாட்டி கையேடு ஒன்றையும் நகர சபை வெளியிடும் எனவும் தெரிவித்தார்.

0 Comments: