Headlines
Loading...
   சாணக்கியனால் மட்டக்களப்புக்கு ரயில் சேவை

சாணக்கியனால் மட்டக்களப்புக்கு ரயில் சேவை



தன்னால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவை, நாளை மறுதினம் (28) முதல் மட்டக்களப்பு - கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.


0 Comments: