Headlines
Loading...
   ஒரு மாதத்தில் 457 டெங்கு நோயாளர்கள்.

ஒரு மாதத்தில் 457 டெங்கு நோயாளர்கள்.



எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத காலத்தினுள் 457 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர் எம். தௌபீக், இன்று (08) தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 168 பேரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 117 பேரும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 142 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 30 பேரும் இவ்வாறு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தை விட இவ் வருடத்தின் முதல் மாதத்திலேயே அதிகளான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலேயே அதி கூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஒருங்கினைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, புகை விசிறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் தமது இடங்களை துப்புரவாக வைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

0 Comments: