யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.
குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவன் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காக காத்திருந்த, 175 விட மிகச் சிறந்த புள்ளிகளை பாடசாலை மட்டத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக திறமை வாய்ந்த மாணவன் என அவர் கல்வி கற்ற பாடசாலையில் தெரிவித்துள்ளனர்
டெங்கு நோயால் பாடசாலை மாணவன் பலி
February 15, 2022
0 minute read
0
Share to other apps