ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாகவும், 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அத்தோடு அதில் நான்கு போர் மரணத்தை தழுவியிருந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த டெங்கு நோயின் பரம்பலில் முக்கிய விடயமாக காணப்படுவது டெங்கு நுளம்பை அழித்தல் என்னும் விடையத்தில் நாங்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதெனவும், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டொங்கு நோயாளர்களை இனங்கண்டிருப்பதால், முக்கியமாக நகரப்பகுதிகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் செயற்பாட்டை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாக இருப்பதாக
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment