பாணந்துறை துப்பாக்கிச்சூடு; பிரதான சந்தேகநபர் சிக்கினார்.

ADMIN
0 minute read
0


கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை - குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடை நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று சந்தேகநபர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து அம்பியூலன்ஸ் சாரதியை சுட முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
To Top