குளத்தில் குளிக்க சென்ற நான்கு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கினர்.. இருவர் உயிரிழப்பு
குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில் நான்கு சிறுமிகள் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.
நால்வரும் நீரில் மூழ்கியதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
பின்னர் அவர்களை பிரதேசவாசிகள் மீட்டதுடன், ஆபத்தான நிலையில் இருந்த மூன்று மாணவிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு சிறுமிகளின் சடலங்களும் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments: