Headlines
Loading...
  கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு.

கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு.



(அஷ்ரப் ஏ சமத்)
பங்களதேஸ் இலங்கைத் உயர் ஸ்தாணிகள்
ஆலயத்தின் அனுசரனையில் 21.02.2022 திங்கட்கிழமை சர்வதேச தாய்மொழி தினம் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.




இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.



அத்துடன் , கல்வியமைச்சா் தினேஸ் குணவா்த்தன, வா்த்தக அமைச்சா் கலாநிதி பந்துல குணவா்த்தன, பங்களதேஸ் நாட்டுக்கான உயா் ஸ்தாணிகா் தாரிக் எம்டி, ஆரிபுல் இஸ்லாம், ஜக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தின் வதிவிடப் பிரநிதி, இராஜாங்க அமைச்சா் தாரக்க பாலசூரிய ஆகியோா்களும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனா்.







இந் நிகழ்வுக்காக சகல பல்லின , பல் மொழி பாடசாலைகளிலுமிருந்து 100 மாணவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா்.




சர்வதேச மொழிகள்
பற்றிய இசைகள்,, பாடல்கள். மொழி பற்றிய பேச்சுக்களும் நிகழ்ந்தது. அத்துடன் சர்வதேச மொழி பற்றி பாடசாலை மாணவா்களுக்கிடையே நடாத்திய கட்டுரைப் போட்டிகளிள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம மந்திரியினால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.




அத்துடன் கொழும்பில் உள்ள ரசிய நாட்டின் கலாச்சார நிலைய மாணவா்கள், சாாக் நாடுகளின் கலாச்சார நிலையத்தின் மாணவா்கள், மாலைதீவு மாணவா்கள், சிவாமி விவேகாநந்தா நிலையத்தின் மாணவா்களது கலை நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றன. இவ் சர்வதேச மொழி தினத்தினை உலக நாடுகளில் உள்ள பங்களாதேஸ் உயா் ஸ்தாணிகா் ஆலயங்கள் ஊடாக வருடா வருடம் சகல நாடுகளிலும் கொண்டாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments: