பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யும் சபாநாயகர்
சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி இடையூறு செய்தமை மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணையின் போது தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த முடிவை பாராளுமன்றத்தில் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று காலை பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
0 Comments: