Top News

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள 3 ஒப்பந்தங்களை மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் அம்பலப்படுத்தவும் - எல்லே குணவன்ச தேரர்




சொற்பத் தொகை பணத்துக்காக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரை வார்ப்பதற்கான சதிகள், திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தாம் தயார் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு, தேரரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா இடையே கைச்சாத்திடப்படவுள்ள 3 ஒப்பந்தங்கள் தொடர்பில் உடனடியாக மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் அம்பலப்படுத்துமாறு எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறப்பட்ட போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் இதுவரை நாட்டுகு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை – சீனா இடையே திடீரென வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post