ரயில் கட்டணங்கள் 58%ஆல் அதிகரிப்பு...
ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (29) தெரிவித்தார்.
இதன்படி ,முதல் 10 கிலோமீற்றருக்கு, 1 ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட்டின் விலை 2 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் அதற்கமைய 10 கிலோமீற்றருக்கான டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நான்கு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
0 Comments: