தனியார் பஸ்களுக்கு தேவையான டீசல் இன்று(02) கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பஸ்களுக்கு தேவையான அளவு டீசல் இன்றைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
இல்லையெனில் பயணிகள் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment