சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் திறமையான மனிதராகப் பார்ப்பதன் காரணமாகவே இன்று அவர் மீது வதந்திகள் பரப்பப்படுகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை அவரால் தீர்க்க முடியும் என மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் பாராளுமன்றத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார். (R)
Post a Comment