Headlines
Loading...
   அடுத்த 4 நாட்களுக்கான மின்வெட்டு விவரம்

அடுத்த 4 நாட்களுக்கான மின்வெட்டு விவரம்






இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 4 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பிரிவுகளில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 4 மணி நேரமும், மாலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

0 Comments: