இலங்கைக்கு 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவிடம் இருந்து..
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கைக்கு 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 36,000 மெட்ரிக் டன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் டீசல் நேற்றும், இன்றும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் இதுவரையில், 270,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
0 Comments: