மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு மற்றுமொரு தடை உத்தரவு


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் பொது நிதியை மோசடி செய்ததாக வண.தினியாவல பாலித தேரர் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 


அஜித் நிவார்ட் கப்ராலை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளார்.