அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை!


நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, ​​இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். 


“இப்படி அதிகரிப்பதன் மூலம் என்ன செய்ய முயல்கிறீர்கள். இவ்வாறு அதிகரிக்கும் போது நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறும். 


10 மில்லியனில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தால் 25 மில்லியனில் கூட கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


இது ஒரு மாஃபியா. இந்த நேரத்தில் சீமெந்து விலையை இறக்குமதியாளர்கள் சங்கம்தான் முடிவு செய்கிறது. 


சீமெந்து மூடை ஒன்றின் விலை இதுதான் என அவர்கள் முடிவு செய்கின்றனர். அது செயற்படுத்தப்படுகிறது. அரசாங்கம் அதில் தலையிடுவதில்லை. 


இந்த வணிக சமூகத்திற்கு நான் கூறுகிறேன், தயவுசெய்து கட்டுமானத் தொழிலை நிறுத்துங்கள். 


நாட்டு மக்களுக்கும் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு இதை நிறுத்த வேண்டும்.



Tags