கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் மகாசங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க சமரசம் ஒன்றை பிரகடணப்படுத்துவதாக அறிவிப்பு .




மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பொறுப்புகூறவேண்டுமென மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.


புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது என மகாநாயக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர்.


20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த அறிவிப்பில் நான்கு முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை முழு அரசியல் பொறிமுறையினாலும் கவனிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிட்டால் மகாசங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க சமரசம் ஒன்றை பிரகடணப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்