கிளப் வசந்த படுகொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Roshan Akther
0

 


கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட 12 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 12 பேரும் இன்று  திங்கட்கிழமை (02) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top