Headlines
Loading...
NPP (JVP)க்கு வாக்களிக்கவுள்ள முஸ்லிம் மக்களுக்கு...!

NPP (JVP)க்கு வாக்களிக்கவுள்ள முஸ்லிம் மக்களுக்கு...!


எஸ். சுபைர்தீன்-

விஜயவீர என்பவரால் 1965களில் நிறுவப்பட்ட கட்சி JVP. நாஸ்திக கம்யூனிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. மத நம்பிக்கை அற்றது. 1971லும் 1988-89களிலும் ஆயுதப்புரட்சி மூலம் அரசைக் கைப்பற்ற முற்பட்டு, மாபெரும் அழிவை நாட்டில் ஏற்படுத்தியது. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையின்படி இக்காலகட்டத்தில் 60, 000க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம் தனவந்தர்களும் ஏனையோரும் தேடித் தேடி தாக்கப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்.

அனுரகுமார திசாநாயக்க கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும்" என்று பேசியுள்ளார். அது மாத்திரமின்றி, "தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் முஸ்லிம் தாய்மார்களின் கருவறையிலிருந்தே பிறக்கின்றார்கள்" என்று வாய் கூசாமல் பேசியுள்ளார். இது 200 கோடிக்கும் மேற்பட்ட உலக முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் ஒரு கூற்றாகும்.

அதுமட்டுமின்றி, ஜேவிபியைச் சேர்ந்த பிமல் ரத்னாயக என்பவர் "முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்ய வேண்டும். அத்தோடு அல்லாஹ்வால், குர்ஆன் மூலம் அனுமதிக்கப்பட்ட பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

2020இல் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது, அதனை ஆதரித்து NPPயின் (JVP) டில்வின் சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

NPP உயர்பீட அங்கத்தவர்களால் அமுல்படுத்துவோம் என்று சொல்லப்பட்ட விபச்சாரம் சட்டமாக்கப்படுமா? ஏனெனில், NPPயில் ஏராளமான பெண்ணியவாதிகள் உள்ளனர். JVPயால் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களின் கத்னா விடயத்தின் நிலை என்ன? முஸ்லிம் பெண்களின் ஆடைக் கோட்பாடான பர்தா, ஹிஜாப், புர்கா, நிகாப் என்பன தடை செய்யப்படுமா? JVPயின் சீருடை யான "செஞ்சட்டையும், குட்டைப் பாவாடையும்" முஸ்லிம் பெண்கள் மீது திணிக்கப்படுமா? இலங்கை யாப்பில் உள்ள முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் (திருமணம், விவாகரத்து, சொத்துரிமை வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவை) JVPயின் பொதுச் சட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுமா? தூக்கியெறியப்படுமா? பெண்ணியவாதிகளால் பேசப்படும் "கருவறை சுதந்திரம்" NPPயால் அனுமதிக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் என்ன.

வக்பு சட்டத்துக்கு உட்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு சொந்தமான வக்பு சொத்துக்கள் நாடு பூராவும் பறந்துள்ளன. பள்ளிவாயல்கள் அது சார்ந்த கட்டிடங்கள், அவற்றின் நிலங்கள், நம்பிக்கை சொத்துக்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் மதரஸாக்கள், அவற்றுக்குச் சொந்தமான நிலங்கள், மையவாடிகள், அவற்றுக்குச் சொந்தமான நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில்உண்டு;. கோடிக்கணக்கில் பெறுமதியான இவை அனைத்தும் முஸ்லிம் சமுதாயத்தின் சொந்த செத்துக்களாகும். இவை அனைத்தும் JVP-NPPயின் நிர்வாகக் குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டு, அக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர் நியமிக்கப்பட்டால் நிலைமை என்ன? அதன் வருமானங்கள் பிறமத தாபனங்களுக்கும் செல்லுமா? முஸ்லிம் மையவாடிகளில் பிற மத பிரேதங்களும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுமா? என்ற அச்சமும் நிலவுகின்றது.

இப்படியான பாரதூரமாக இஸ்லாத்தையும் முஸ்லிம் சமுதாயத்தையும் பாதிக்கக்கூடிய கேள்விகள் ஏராளம் உள்ளன.

எனவே, முஸ்லிம்களே!! இத்தேர்தல் முஸ்லிம்களின் இன்றைய நிலையையும், எதிர்கால சந்ததியினரையும் பாரதூரமாக பாதிக்கக் கூடியதாக அமையப் போகின்றது.

எனவே உங்கள் மீது கடமைகள் பொறுப்புக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதை உணர்ந்து, அறிந்து உங்களுடைய பெறுமதியான, அமானிதமான வாக்குகளை அளிப்பீர்கள் என நம்புகின்றோம். வேண்டி நிற்கின்றோம்.

0 Comments: