- கொழும்பு பெரிய பள்ளி அறிவிப்பு
இன் ஷா அல்லாஹ் இம் மாதம் 27/05/2025 செவ்வாய்க்கிழமை மற்றும் 28/05/2025 புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் சூரியன் புனித கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும் நாட்களாக அமையப் பெறுகிறது.
அந்த வகையில் இலங்கை நேரம் பகல் 2.48 மணிக்கு சூரியன் 27ஆம் திகதி +89° 56' 25" என்ற பெருமானத்திலும், 28 ஆம் திகதிக்கு +89° 53' 53" என்ற பெருமானத்திலும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும்.
நம் நாட்டில் இக்குறிப்பிட்ட நேரத்தில் (பகல் 2.48 மணிக்கு) சூரியன் மேற்குப் பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு செங்குத்தான (90°) பொருளில் கிழக்குப் பக்கமாக விழும் நிழலை அடையாளப்படுத்தி அந் நிழலுக்கு எதிர்பக்கமாக ( மேற்குப் பக்கமாக) முன்னோக்கினால் அது கிப்லாவின் திசையாக அமையப்பெறும்.
எனவே காலநிலை சீராக இருந்தால் கிப்லாவின் திசையை இவ்விரு நாட்களில் துல்லியமாக அடையாளப்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தினை நழுவ விடாது நமது வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற இபாதத் செய்யும் இடங்களில் கிப்லாவின் திசையை துல்லியமாக அடையாளப்படுத்துவது ஃபர்ழு கிஃபாயாவாகும்.