அர்ஜுன் மற்றும் கசுன் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!


மத்திய வங்கி பிணை விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என  சிறைச்சாலைகள் திணைக்களம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
குறித்த  இருவரும் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் மற்றும் கசுன் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! அர்ஜுன் மற்றும் கசுன் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! Reviewed by NEWS on February 24, 2018 Rating: 5