என்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த ராஜபக்ச


என்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும், அப்போது அவர் செயற்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிலியந்தல ஸ்ரீ வித்யா சாந்தி மகா விகாரைக்கு சென்று அங்குள்ள குறைபாடுகளை மஹிந்த ராஜபக்ஷ கேட்டறிந்தார். இதன்போது விகாரையின் விகாராதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி வந்தால், இந்தக் குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
விகாராதிபதியிடம் தாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதாக கூறியுள்ளீர்கள். ஏன்? இதனை இரகசியமாக வைத்துள்ளீர்கள் என மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியதற்கே அவர் இவ்வாறு கூறினார்.
நான் எவரிடமும் இன்னும் கோட்டாபய பற்றிக் கூறவில்லை. என்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபய செயற்படுவார் என்றே கூறினேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...