500 மில்லியன் ரூபாய் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர்

Ceylon Muslim
0 minute read
500 மில்லியன் ரூபாய்க்காக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விற்றுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லையென, வனஜீவராசிகள் அமைச்சர் வசந்த சேனநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேவையான மாற்றத்தை ஏற்றுக்கொண்டே தான் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளதாகவும் அமைச்சரின் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
தான் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கும் போது, நாட்டு மக்களுக்காக தான் எதிர்பார்த்ததை செய்ய கட்சியின் தலைவர்கள் இடமளிக்கவில்லையென்றும் அமைச்சரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Top