விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. 
இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

